அதிமுகவிற்கு ஓட்டு போட வேண்டாம் என கூறி சீர்மரபினர் சமுதாயத்தினர் தேனி மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக கூறி இன்று சீர்மரனர் சமூதாயத்தினர் வீடுகள் தோரும் கருப்பு கொடி கட்டி அதிமுகவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பு.
ஆங்கிலேயர் காலத்தில் போடபட்ட சட்டமான குற்றப்பரம்பரை சட்டத்தால் இந்தியா முழுவதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு DNT சான்றிதல் வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் DNC சான்றிதல் வழங்கப்பட்டு வருவதை கண்டித்தும் ,
அரசாணை எண் 1310 ரத்து செய்து DNT சான்றிதல் வழங்க கோரி 68 உட்பிரிவுகளை கொண்ட சீர்மரபின சமுதாயத்தினர் கடந்த 6 ஆண்டுகளாக போராடி வந்த நிலையில் அதிமுக அரசு அரசு சீர்மரபின சமுதாயத்திற்கு 7 சதவீத ஒதுக்கீடு என்ற பெயரில்,
சீர்மரபினர் சமுதாயத்தை ஏமாற்றி இரட்டை சான்றிதல் முறையை ரத்து செய்து DNT ஒற்றை சான்றிதல் முறையை அமல்படுத்தாமல் வஞ்சித்து உள்ளதாக கூறி பெரியகுளம் அருகே T.கள்ளிப்பட்டி பகுதியில் உள்ள சீர்மரபினர் சமுதாயத்தினர் வீடுகள் தோறும் கருப்புக்கட்டி சீர்மரபினர் சமுதாயத்தினர் அதிமுக விற்கு வாக்களிக்க கூடாது என்று கூறி பிரச்சாரம் செய்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் சீர்மரபினர் சமுதாயம் உள்ள கிராமங்கள் தோரும் சென்று சீர்மரபினர் சமூதாயத்தை வஞ்சித்துள்ள அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என கூறி பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக சீர்மரபினர் நலச்சங்க தேனி மாவட்ட தலைவர் தெரிவித்துள்ளன