இன்றைய கொரோனா பாதிப்பு 1,391; குணமடைந்து வீடு திரும்பியோர் 1,426

தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; மருத்துவமனையில் இருந்து 1,426 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,391 ஆகும்; இதில் சென்னையில் மட்டும் 356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 7,87,554 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஆண்கள் 4,75,883 பேர். பெண்கள் 3,11,637 பேர். மூன்றாம் பாலினத்தவர் 34 பேர் ஆவார்கள்.

கொரோனா பாதித்து தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,938. இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரி எண்ணிக்கை 70,378; இதன் மூலம் மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,23,34,447 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,426 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 7,64,854 பேராக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்றுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 4 இறந்தனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,762 ஆக அதிகரித்துள்ளது.

Translate »
error: Content is protected !!