இராமநாதசாமி கோவிலில் பூஜை பொருட்களை அனுமதிக்க கோரி……கோவில் அலுவலகம் முன்பு தேங்காய் உடைத்து போராட்டம்

இராமேஸ்வரம், இராமநாதசாமி கோவிலில் பூஜைக்கு தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்களை அனுமதிக்க கோரி இந்து முன்னணி அமைப்பினர் கோவில் அலுவலக வாசல் முன்பு தேங்காய் உடைத்து போராட்டம் நடத்தினர்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் செய்யப்பட்டிருந்ததுஇதனால் தமிழகத்திலுள்ள கோயில்கள் அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுஅதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு  கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் மட்டும் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது,

இதனை தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் மட்டுமே செய்து வந்தனர், இந்த நிலையில் கோவிலில் பூஜை பொருட்களை எடுத்து சென்று வழிபட கோவில் நிர்வாகம் அனுமதி அழிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்,

இதனைத் தொடர்ந்து இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் ஏராளமானோர் ஊர்வலமாக வந்து கோவில் அலுவலகம் முன்பாக பூஜை பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி வழங்காத   கோவில் இணை ஆணையர் கல்யாணிக்கு  எதிராக கண்டன முழக்கமிட்டனர்,

அதனைத் தொடர்ந்து கோவிலில் அலுவலக வாசல் முன்பாக இந்து முன்னணியை சேர்ந்தவர்கள்  தேங்காய்களை உடைத்து தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர், முன்னதாக ஊர்வலமாக வந்து  கோவில் அலுவலகதிற்குள்  நுழைய முயன்றனர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கோவில் அலுவலக வாயிலை  மூடினர்இதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர்  கைது செய்து வழக்கு பதிவு செய்து தனியார் திருமண மகாலில் அனைவரையும் அடைத்து வைத்தனர்.

Translate »
error: Content is protected !!