கர்நாடகாவில் இன்று 1,769 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று தொற்றுநோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,714 ஆக உள்ளது. தொற்று காரணமாக இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 24,305 ஆக உள்ளது. இதுவரை தொற்றுநோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 28,50,717 ஆக உள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,680 ஆக அதிகரித்துள்ளது.