குரோம்பேட்டையில் காணாமல் போன 17 வயது சிறுமி மீட்பு

சென்னை குரோம்பேட்டையில் காணாமல் போன 17 வயது சிறுமியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை நகரில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடித்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காக கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு, சிறுவர் நல காவல் பிரிவு காவல் குழுவினர் இணைந்து சென்னை நகரில் காணாமல் போன குழந்தைகளை தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். அதன் பேரில் குரோம்பேட்டை காவல் நிலைய சரகத்தில் கடந்த செப்டம்பர் 6-ம் தேதி    17 வயது சிறுமி காணவில்லை என சிறுமியின் தந்தை புகார் அளித்திருந்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறுமியை குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். சென்னையிலுள்ள பேருந்து நிலையங்கள், மகளிர் காப்பகங்கள், தனியார் நிறுவனங்கள், புனித தலங்கள், மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் தேடுதலில் ஈடுபட்டனர். அதனையடுத்து சிறுமியை பள்ளிகரணை பகுதியில் மீட்டு குரோம்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து சிறுமியுடைய பெற்றோரிடம் ஆய்வாளர் முன்பாக தனிப்படையினர் ஒப்படைத்தனர்.

Translate »
error: Content is protected !!