தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் 4 ஆயிரத்திற்கு கீழாக குறைந்தது. இன்று 3,094 பேருக்கு தொற்று கண்டறியபப்ட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த பல மாதங்களாகவே, கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. எனினும் அரசு மேற்கொண்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளினால், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது.
தொடர்ந்து சில நாட்களாக குறைந்து வரும் தொற்றின் எண்ணிக்கை, நேற்று 4 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இந்நிலையில், 2வது நாளாக இன்றும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இன்று 3,094 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,94,030ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 857 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,91,754 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,741 ஆக உயர்ந்துள்ளது. இன்று 80,371 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 91.12 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 4,403 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 46 ஆயிரத்து 555 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.