கொடைக்கானலில் பள்ளி மாணவ மாணவிகளை தேடி வந்து பாடம் நடத்தும் ஆசிரியர்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகம் முழுக்க பள்ளிகள் செயல்படாத நிலையானது நீடித்து வருகிறது.

இந்த நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் முதல் கல்லூரி மாணவ மாணவிகள் வரை அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக பகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொடைக்கானலை பொருத்தவரையில் கொடைக்கானலில் இருக்கக்கூடிய பல்வேறு மலை கிராம பகுதிகளில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் இந்த ஆன்லைன் வகுப்புகள் மிகவும் சவாலாகவே இருந்தது.

இந்த நிலையில் பள்ளியில் படித்து வரக்கூடிய மாணவ மாணவிகள் தங்களுடைய பள்ளிப்படிப்பை மறக்கவும் செய்து இருக்கிறது. மேலும் பத்தாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு முறையான தமிழ் கூட தெரியாத நிலை நீடித்து வருவதாக இருக்கக்கூடிய ஆசிரியர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கொடைக்கானல் நகர் பகுதியில் இருக்கக்கூடிய பாக்கிய புரம் சிஎஸ்ஐ மிடில் ஸ்கூல் அதாவது அரசு உதவி பெறும் திகழ்ந்து வரக்கூடிய இந்த பள்ளியில் இருந்து புதுவித முயற்சியை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

அங்கு இருக்கக்கூடிய ஆசிரியர்கள் அந்த பள்ளியில் படிக்க கூடிய மாணவர்களை 4 தெருக்களில் பிரித்து அந்தந்த தெருக்களில் ஆசிரியர்கள் மாணவர்கள் வீட்டுக்கு நேரடியாக சென்று பாடங்களை எடுத்து வருகிறார்கள் மேலும் ஒரு சில பகுதியில் மாணவர்களை ஒரே இடத்தில் குழுமம் செய்து அந்த இடத்தில் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியுடன் ஆசிரியர்கள் பாடங்களையும் கற்பித்து வருகிறார்கள்.

ஆன்லைன் வகுப்புகள் நீங்கி தற்போது நேரடியாக ஆசிரியர்களை சென்று பாடத்தை சொல்லக்கூடிய இந்த நிலையில் பாடங்களை கற்பதில் மிகவும் எளிதாக இருப்பதாக பள்ளியில் பயிலும் மாணவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் நேரடியாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்களை சந்தித்து பாடங்களை கற்றுக் கொடுப்பது மனநிறைவு தருவதாக ஆசிரியர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள் தரை தளங்களை பொறுத்தவரையில் ஆன்லைன் வகுப்புகள் எளிதாக இருந்தாலும் மலைப்பகுதி பொறுத்தவரையில் தற்போது இந்த பள்ளியில் முதன்முறையாக எடுத்து இருக்கக்கூடிய இந்த இந்த முயற்சி பலர் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது மேலும் இதேபோல் சமூக இடைவெளி விடனும் அரசு பள்ளி ஆசிரியர்கள் நேரடியாக மலை கிராமங்களுக்கு சென்று மாணவர்களுக்கு கல்வி பயில செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதே அனைவருடைய கருத்தாக இருக்கிறது

Translate »
error: Content is protected !!