சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு 20% ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளொன்றுக்கு 700 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 90 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி, நெல்லை, கோவை, உள்ளிட்ட ஊர்களுக்கு காலை 7 மணிமுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் குறைந்த அளவிலான பயணிகளே பயணித்து வருகின்றனர்.