சென்னை, மயிலாப்பூர் பகுதியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, மயிலாப்பூர், ராயப்பேட்டை ஐரோடு மற்றும் சிவசாமி சாலை சந்திப்பில் தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போனது. அது தெசாடர்பாக வேளாங்கண்ணி என்பவர் மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதனையடுத்து உண்டியல் திருட்டில் ஈடுபட்ட ஆர்ஏ புரம் கிரீன்வேஸ் சாலையைச் சேர்ந்த மோசஸ் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ. 1,443 பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் மோசஸ் மீது ஏற்கனவே பட்டினப்பாக்கம் காவல் நிலைய எல்லையில் ஒரு கோயிலின் உண்டியலை உடைத்து பணம் திருடியது தொடர்பாக வழக்கு உள்ளது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் மோசஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.