செயின் பறிப்பு கொள்ளையன் கைது

சென்னை அடையாறு காவல் மாவட்டம் கண்ணகி நகரில் செயின்பறிப்பு கொள்ளையனை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.

சென்னை, துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகி நகர், இந்திரா நகர் ஒக்கியம்பேட்டையில் வசித்து வருபவர் ரஞ்சித்குமார் (வயது 30). தனியார் கம்பெனியில் ஊழியர். கடந்த 29ம் தேதி இரவு ஓஎம்ஆர் சர்வீஸ் சாலையில் ஒக்கியம்பேட்டை அருகே ரோட்டில் நடந்து சென்ற போது அங்கு பைக்கில் வந்த நபர் ரஞ்சித்குமார் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்று விட்டார். அது தொடர்பாக கண்ணகி நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சரவணன் (வயது 28) என்பவரை கைது செய்தனர். அவர் மீது மைலாப்பூர், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி பகுதியில் பல செல்போன் பறிப்பு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 2 பவுன் தங்கச்செயின் மற்றும் கொள்ளைக்குப்பயன்படுத்தப்பட்ட டியோ இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு செயின் பறிப்புக் கொள்ளையனை கைது செய்த தனிப்படையினரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.

Translate »
error: Content is protected !!