திருச்சி விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில், 1.39 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளை, வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதில், விருதாச்சலத்தை சேர்ந்த சம்சுதீன் என்ற பயணியை பரிசோதனை செய்தபோது அவர் தன் உடைமைகளில் தங்கத்தை மறைத்து கொண்டு வைத்திருந்தது தெரிய வந்தது.
மறைத்து கொண்டு வரப்பட்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவ்வகையில், 2 கிலோ 67 கிராம் எடையுள்ள 23 தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு பயணி 1.39 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தங்கத்தை கடத்தி வந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.