பொதுத்துறை நிறுவனமான மின் வாரியத்தை தனியார்மயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக துணை மின் நிலையங்களை தனியாருக்கு ஒப்படைக்கப்பட்ட நிலையில் தற்போது மின்வாரியத்தில் ஹெல்ப்பர்,
கம்பியாளர் பதவிகளை தனியாரிடம் காண்ட்ராக்ட் முறையில் ஒப்படைக்கும் முறையினை அரசு நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளதை கண்டித்து திருச்சி மன்னார்புரம் மின்வாரிய அலுவலகத்தில் 1500க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் இன்றைய தினம் பணிகளைப் புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நுகர்வோர்களின் மின்தடையை சரி செய்யும் பணியினை மேற்கொண்டு வரும் இந்த ஹெல்ப்பர் மற்றும் கம்பியாளர் 31 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப கோரி தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கை வைத்தும், ஏற்கனவே பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் மற்றும் கேங்மேன் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை நிரப்பாமல் தமிழகம் முழுவதும் காலி பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கு மின்வாரியம் தனியார்மயத்தை நோக்கி செல்லும் வகையில் உத்தரவிட்டுள்ளது, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் இதனை ரத்து செய்யும் வரை தமிழகம் முழுவதுமுள்ள இந்த போராட்டம் தொடரும் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.