நீதிபதிகள் குறித்த அவதூறு பேச்சு: ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது

உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன், சென்னையில் இன்று கைது செய்யப்பட்டார்.

சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றிய கர்ணன், அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வந்தார். ஓய்வு பெற்ற நீதிபதியான கர்ணன், நீதிபதிகளையும் அவரது குடும்பத்தினரையும் அவதூறாக பேசிய வீடியோ வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, அவர் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில், ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், கர்ணனை கைது செய்யாதது குறித்து, நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. இதுகுறித்து டிஜிபி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோர் டிசம்பர் 7ஆம் தேதி விளக்கம் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிபதிகளை அவதூறாக பேசிய வழக்கில், சென்னை ஆவடியில் கர்ணனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர்.

Translate »
error: Content is protected !!