தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை விதித்து, கர்நாடக முதல்வர் எடியூரப்ப திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காற்று மாசுபாடு அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, ஒரு சில மாநிலங்கள் தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளன. காற்று மாசுபாடு அதிகமுள்ள டெல்லியில், நாளை முதல் வருகிற 30ந்தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளையும் வெடிக்க மாநில அரசு தடை விதித்தது.
இதேபோல், ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களில் தீபாவளியையொட்டி பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், கர்நாடகாவில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா இன்று அறிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை வருகிற 16ம் தேதி கொண்டாடப்படும் சூழலில், மாசுபாடு மற்றும் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்படுவதாக, மாநில அரசு தெரிவித்துள்ளது.