பறிக்காமல் செடியில் அழுகும் தக்காளி! உரிய விலையின்றி விவசாயிகள் சோகம்!!

போதிய விலை கிடைக்காததால், விளைந்த தக்களியை விவசாயிகள் பறிக்காமல் விட்டதால், விளைநிலத்திலே அவை அழுகி வருகின்றன.

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் அனைத்து வகையான காய்கறிகளையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்களம், சில்வார்பட்டி, குள்ளப்புரம், தேவதானபட்டி,சக்கரைபட்டி உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் சுமார் இரு நூறுக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் தக்காளி நடவு செய்துள்ளனர்.

இங்கு விளைவிக்கப்படும் விவசாய விளைபொருட்கள் பெரியகுளம், ஆண்டிபட்டி, வத்தலக்குண்டு பகுதிகளில் உள்ள கமிஷன் மண்டிகளுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்று வந்தனர்.

தற்போது தக்காளியின் வரத்து அதிகரித்து விலை கிலோ ஒன்று 5 ரூபாய்க்கும் கீழ் சென்றுள்ளது. இதனால் பறிக்கும் கூலிக்கு கூட வராத நிலையில் பழுத்த தக்காளி பழங்களை பறிக்காமல் விளைநிலங்களிலேயே அவற்றை விட்டுவிடுகின்றனர்.

இவ்வாறு பறிக்கப்படாமல் விடப்பட்டுள்ள தக்காளிகள் செடியில் அழுகி வருகின்றது. கடந்த 15 நாட்களுக்கு மேலாக இருக்கும் தக்காளி செடிகளுக்கு நீர் பாய்சுவதையும் விவசாயிகள் நிறுத்தி உள்ளனர்.

Translate »
error: Content is protected !!