பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவராக, தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பொறுப்பேற்ற பிறகு, தேசிய நிர்வாகிகள் மாற்றியமைக்கப்பட்டனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் யாருக்கும் எவ்வித பொறுப்பும் வழங்கப்படவில்லை.
குறிப்பாக, தேசிய செயலாளராக இருந்து வந்த எச்.ராஜாவின் பதவி பறிக்கப்பட்டது. இதனால், தமிழக பா.ஜ.க. தலைவர்கள் டெல்லி தலைமை மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இந்த சூழலில், கோவை மாவட்டத்தை சேர்ந்த வானதி சீனிவாசனை பா.ஜ.க.வின் தேசிய மகளிர் அணி தலைவராக நியமித்து, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார். வானதி தற்போது பாஜக மாநில துணைத் தலைவர் பொறுப்பில் உள்ளார்.
தேசிய மகளிர் அணி தலைவராக நியமிக்கப்பட்ட வானதி சீனிவாசனுக்கு அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.