தஞ்சாவூர்
பொதுமக்கள் புயல் நிவாரண முகாமுக்கு பாதுகாப்பாக செல்ல வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் தஞ்சை நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
நிவர் புயல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து துறை சார்பிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சாலையோரம் படர்ந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணிகள் வயல்களில் தேங்கி இருக்கும் தண்ணீர் அகற்றும் பணிகள் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தஞ்சையில் கனமழை பெய்து வருவதால் ஆற்று கரையோரம் இருக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருகின்றனர். மேலும் கடல் பகுதியில் இருக்கும் மீனவர்கள் புயல் நிவாரண முகாமுக்கு உடனடியாக செல்ல வேண்டுமென ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலமாக மாநகராட்சி பகுதிகளிலும் பேரூராட்சி பகுதிகளிலும் தெருத்தெருவாக சென்று அறிவிப்பு விடுத்து வருகின்றனர்.