பெண்ணை வரதட்சணை கொடுமை செய்த கணவன், மாமியாருக்கு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு

சென்னை,

பெண்ணை, வரதட்சணை கொடுமை செய்து தற்கொலைக்கு துாண்டியதாக கணவர், மாமியார் ஆகியோருக்கு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது,

விருதுநகரைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 53). இவர் சென்னை, கிண்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, ‘‘என்னுடைய 2வது மகளான அனிதா (வயது 28)வை கிண்டி நரசிங்கபுரத்தில் வசித்து வந்த ராஜேஷ் (வயது 31) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தேன்.

திருமணத்தின் போது சுமார் 70 சவரன் பவுன் தங்க நகைகளை வரதட்சணையாக பெற்ற பின்னரும் அனிதாவை அவரது கணவர் ராஜேஷ் (வயது 34) மற்றும் மாமியார் ராஜம்மாள் (வயது 61) ஆகிய இருவரும் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகின்றனர்.

இந்நிலையில் வரதட்சணை கொடுமை தாங்கமுடியாமல் அனிதா மாமியார் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் இறப்பிற்கு காரணமான எனது மகளின் கணவர் மற்றும் மாமியார் ராஜம்மாள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.

இந்த சம்பவம் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்தது. அந்த புகாரின் பேரில் ராஜசேகரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கின் மீதான விசாரணை சென்னை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

சிறப்பு அரசு வழக்கறிஞராக ஸ்ரீலேகா அரசு தரப்பு வாதங்களை முன்வைத்து வாதிட்டார். இருதரப்பு வாதங்களை வைத்தும் சாட்சியங்களை வைத்தும் ராஜேஷ் மற்றும் ராஜம்மாள் இருவரும் குற்றவாளிகள் என உறுதியானது.

விசாரணை முடிந்து இந்த வழக்கில் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக கணவர் ராஜேசுக்கு 5 வருட சிறை தன்டணை மற்றும் ரூ. 10, ஆயிரம் அபராதமும் கட்டதவறினால் மேலும் 3 மாத சிறை தண்டணையும் விதிக்கப்பட்டது. மற்றொரு எதிரி மாமியார் ராஜம்மாள் என்பவருக்கு 1 ஆண்டு சிறை தண்டணையும்

மற்றும் 5 ஆயிரம் அபராதமும் கட்டதவறினால் 1 மாத சிறை தண்டணையும் விதித்து நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கினார். அதனையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். வரதட்சணை கொடுமை வழக்கில்

குற்றவாளிகளுக்கு தண்டணை பெற்று தந்த இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் நீதிமன்ற அலுவல் புரிந்துவரும் முதல் நிலைகாவலர் காவலர் சரவணவிஜய், ஆனந்த் ஆகியோரை போலீஸ் கமிஷனர் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.

Translate »
error: Content is protected !!