தமிழகத்தில் திருவண்ணாமலை, ராணிபேட்டை, சிவகங்கை, தென்காசி,தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, குறைதீர்ப்பு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியராக மதுசூதனன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு வாரியம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பொறுப்பு) இயக்குநராக இருந்த விஷ்ணு நெல்லை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியராக உள்ள ஷில்பா பிரபாகர் சுகாதாரத்துறை இணை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மீன்வளத் துறையின் மேலாண்மை இயக்குநராக இருந்த சமீரனை ஐஏஎஸ் தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளராக இருந்த ஏ.ஆர். கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளதாக, அதில் கூறப்பட்டுள்ளது.