மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை நியமித்தார் நடிகர் விஜய்

விஜய் மக்கள் இயக்கத்திற்கு மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை நடிகர் விஜய் நியமித்துள்ளார்.

நடிகர் விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர், “விஜய்அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்” என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் கடந்த வாரம் அரசியல் கட்சியை பதிவு செய்தார். இதில் நடிகர் விஜய்க்கு விருப்பம் இல்லை; அவரது செயலுக்கு விஜய் சார்பில் மறுப்பும் எதிர்ப்பும் தெரிக்கப்பட்டது.

மேலும், அந்த கட்சியுடன் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் விஜய் அறிவுறுத்தி இருந்தார்.  தன் பெயரையோ புகைப்படத்தையோ தனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இதற்கு மத்தியில், மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் நேற்று சென்னை பனையூரில் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் தற்போது விஜய் மக்கள் இயக்கத்திற்கு மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை, நடிகர் விஜய் நியமித்துள்ளார். அதன்படி மாவட்ட தலைவர்கள், இளைஞரணி தலைவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தனது புகைப்படம், இயக்கத்தின் பெயர், கொடி உள்ளிட்ட அனைத்து பயன்பாடுகளுக்கும் அனுமதி பெற வேண்டும். மீறுவோர் மீது இயக்கத்தின் சார்பில் ஒழுந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!