சென்னை பட்டரவாக்கம் கச்சினாங்குப்பத்தை சேர்ந்தவர் ஜெரினா. இவருக்கு எண்: 47/52,கன்னியம்மன் கோயில் தெரு,கச்சினாங்குப்பம்,பட்டரவாக்கம்,சென்னை:600098 என்ற முகவரியில்,அவரது தந்தை 1952-ம் ஆண்டு சொத்து கிரயம் செய்து வாங்கியுள்ளார்.இதில் 6 சென்ட் இடத்தை கடந்த 2014-ம் ஆண்டு ஜெரினாவுக்கு செட்டில்மெண்ட் பத்திரம் மூலம எழுதி கொடுத்துள்ளார். இதில் வசித்து வந்தநிலையில் ஜெரினாவின் தந்தை 2017-ம் ஆண்டு காலமாகிவிட்டார்.
இதை சாதகமாக பயன்படுத்தி அவரது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் முன்னாள் அமைச்சர் பெஞ்சமினிடம் டிரைவர் வேலை பார்க்கும் சீனிவாசன், கேசவன்,பாலமுருகன், கலையரசன், மற்றும் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் போலியான ஒரு ஆவணத்தை தயார் செய்து வைத்துக் கொண்டு ஜெரானவின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்துள்ளார்கள் .
இதனை தடுத்து நிறுத்தி ஜெரினா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்..புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. மேலும் போலி ஆவணங்களை வைத்துக்கொண்டு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு நலத்திட்ட உதவிகளை வாங்குவதற்கு முயற்சி செய்துள்ளார்கள் அதையும் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி தடுத்து நிறுத்தியுள்ளார் ஜெரினா.
அதன் பிறகு என் வீட்டின் மேல் வேலிக்காத்தான் மரம் சாய்ந்து விழுந்த நிலையில் அதை வெட்ட விடாமல் தகராறு செய்துள்ளார்கள் பின்னர் ஜெரினா உயர் நீதிமன்றத்தை அணுகி மரத்தை வெட்டுவதற்கு உத்தரவும் வாங்கி அந்த உத்தரவை காவல் உதவி ஆணையாளர், மற்றும் அம்பத்தூர் நகராட்சி மண்டல அலுவலர் ஆகியோரிடம் கொடுத்துள்ளார்.
அவர்கள் அதைப் படித்துவிட்டு நீங்கள் மரத்தை வெட்டுங்கள் என்று கூறியதின் பேரில் மரத்தை வெட்ட முயன்றபோது போலீஸ் வந்து மரத்தை வெட்டக்கூடாது காவல் ஆய்வாளர் விஜயராகவன் இது சம்பந்தமாக ஆர்டிஓ விசாரணைக்கு அனுப்பி முடிவு வந்த பிறகுதான் மரத்தை வெட்ட வேண்டும் என்று தடுத்து நிறுத்தியதாக ஜெரினா புகார் தெரிவித்துள்ளார். .
பின்னர் மேற்கண்ட நபர்கள் பதிவு செய்து வைத்துள்ள போலி ஆவணம் தொடர்பாக ராயப்பேட்டை மாவட்ட பதிவாளரிடம் நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுத்து அவர்களும் விசாரணை செய்து முடிவில் அவர்கள் பதிவு செய்து வைத்துள்ள ஆவணம் பதிவு நடைமுறை மீறிய செயல் என்று உத்தரவு வழங்கி அந்த உத்தரவை மேற்கண்ட நபர்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார்கள்.
பின்னர் R D O விசாரணையும் முடிந்து அங்கிருந்து மரத்தை வெட்டிக் கொள்ளலாம் என்ற உத்தரவும் ஜெரினாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னாள் அமைச்சரின் விசுவாசிகள் மீண்டும் அந்த உத்தரவை தடுத்து நிறுத்த மனு கொடுத்துள்ளார்கள் .
மீண்டும் அந்த மனுவை விசாரித்து, மனுதாரர்கள் இடத்திற்கான எந்த ஒரு ஆவணமும் அவர்களிடம் இல்லை. எதிர்மனுதாரர் ஜெரினா சொத்துக்கான எல்லா ஆவணமும் சமர்ப்பித்துள்ளார். இதற்குமேல் மனுதாரர் ஆகிய நீங்கள் நீதிமன்றத்தை நாடுங்கள் என்று உத்தரவு வழங்கப்பட்டது. பின்னர் காவல் ஆய்வாளர் பரணிதரனை சந்தித்துஜெரினா முறையிட்டுள்ளார்..அவரும் விசாரணை செய்துவிட்டு நீங்கள் மரத்தை வெட்டிக் கொள்ளுங்கள் என்று சொன்னதின் பேரில் மரத்தை வெட்டியபோது முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்களும் அடியாட்களும் சேர்ந்து கையை வைச்சா உங்கள் கையையும் காலையும் எடுத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்கள்.
இதையடுத்து ஜெரினா காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அங்கிருந்து காவல் ஆய்வாளர் நேரில் வந்து விசாரணை செய்து மரத்தை வெட்டுவதற்கு முழு பாதுகாப்பும் கொடுத்துள்ளார். மறுநாள் வெட்டிய மரங்களை அப்புறப்படுத்தும் வேலைகளை செய்து கொண்டிருந்த போது முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்களும் ரௌடிகளும் சேர்ந்து அத்துமீறி நுழைந்து பெண்கள் என்றும் கூட பாரக்காமல் கையை பிடித்து கீழே தள்ளி கையில் வைத்திருந்த ஆயுதங்களைக் கொண்டு பலமாக தாக்கியுள்ளார்கள்
இதை கண்ட ஊர் மக்கள் அச்சமடைந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததும் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 4 ரவுடிகளையும் விரட்டிப் பிடித்து கைது செய்துள்ளார்கள். பின்னர் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை முடிந்து மீண்டும் காவல் நிலையம் வந்துள்ளார் ஜெரினா. அப்போது ஆய்வாளர் உங்களை தாக்கியவர்களை கைது செய்து விட்டோம் இனி மரத்தை வெட்டும்போது தெரியப்படுத்துங்கள் நாங்கள் உங்களுக்கு உரிய பாதுகாப்பு தருகிறோம் என்று கூறியதை நம்பி ஜெரினா வீடு திரும்பியுள்ளார்.
இதையடுத்து தேர்தல் தேதி அறிவிப்பு கொடுத்ததால் தேர்தல் முடிந்த பிறகு மரத்தை ஃவெட்டுங்கள். இப்போது எதுவும் செய்ய வேண்டாம் என்று ஆய்வாளர் சொன்னதின் பேரில் ஜெரினா வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து காவல் ஆய்வாளர் பரணிதரன் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இப்பொழுது தேர்தல் தேதி முடிந்து கொரோனா லாக்டவுன் சூழ்நிலையை பயன்படுத்தி முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள் தம்முடைய இடத்தில் நுழைய முயற்சி செய்கிறார்கள் என்றும் அந்த இடத்திற்கு சென்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார்கள் என ஜெரினா புகார் தெரிவித்துள்ளார்.
தம்முடைய இந்த நிலைக்கு முக்கிய காரணம் முன்னாள் அமைச்சர் பெஞ்சமினிடம் டிரைவர் வேலை செய்யும் சீனிவாசன்) அதே போல் கந்து வட்டியில் பணம் சம்பாதிக்கும் கேசவன். இவர்களுக்கு உறுதுனையாக முன்பிருந்த காவல் ஆய்வாளர் விஜயராகவன் இவர்கள் தான் என்றும் ஜெரினா குற்றம் சாட்டியுள்ளார். ஆதலால் தமக்கு ஏற்பட்ட இந்த பேராபத்தை மாண்புமிகு முதலமைச்சர் கவனத்திற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சேரும் வரை கொண்டு சென்று எங்களுக்கும், எங்கள் இடத்தை அபகரிக்க முயற்சி செய்பவர்கள் மீது கடும நடவடிக்கை எடுப்பதற்கு உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று காவலுதுறைக்கும் அரசுக்கும் அனுப்பிய மனுவில் ஜெரினா குறிப்பிட்டுள்ளார்.