மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை: காமுகன் கைது

செய்தியாளர் – மு. ராஜா முஹம்மது

–––––––––––––––––––––––––––––––––––––––––––––

கோட்டைப்பட்டினத்தில் வயதான மூதாட்டியை கொலை செய்து மானபங்கம் செய்து நகைகளை கொள்ளையடித்த காமுகனை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம், கரகதிகொட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்பம்மாள் (வயது 75).  தனது ஓட்டு வீட்டில் கணவர் இல்லாத நிலையில் கடந்த 20 வருடமாக தனியாக வசித்து வந்தார். அருகில் அவருடைய அக்கா மகளான செல்வி என்பவர் சாப்பாடு கொடுத்து வந்தார். செல்வி நேற்று முன்தினம் இரவு ஜெகதாப்பட்டினம் சென்றுவிட்டு காலை 7 மணிக்கு வீட்டிற்கு வந்து தனது சின்னம்மாவை வெளியில் நின்று கூப்பிட்டு உள்ளார். அதற்கு எதுவும் பதில் அளிக்காமல் இருந்ததால் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளர். அப்போது நிர்வாண நிலையில் மார்பக துணி விலகிய நிலையில் சுப்பம்மாள் முகத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த செல்வி அது தொடர்பாக கோட்டைப்பட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். டிஎஸ்பி சிவராமன், இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் (பொறுப்பு) ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் மூதாட்டி சுப்பம்மாள் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சுப்பம்மாள் வீட்டில் அருகில் தங்கியிருந்த வீரரராஜ் என்பவர் தலைமறைவாகி விட்டதால் அவரை போலீசார் தேடினர். அதனையடுத்து வீரராஜை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மூதாட்டி சுப்பம்மாவை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்ததாக ஒப்புக் கொண்டார்.

வீரராஜ் அதே பகுதியில் உள்ள செந்தில்நாதன் என்பவர் வீட்டில் கடந்த 20 நாட்களாக தங்கி விவசாயக் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருடன் சேர்ந்து சுமார் 15 நபர்கள் வேலைக்கு வந்துள்ளனர். இந்நிலையில் செந்தில்நாதன் புயல் காரணமாக ஊருக்கு சென்று விட்டதால் வீரராஜ் மட்டும் ஊரில் இருந்து விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். சுப்பம்மாள் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற அவரது உறவுப்பெண் ஜீவாவை அடைய வீரராஜ் சமயம் பார்த்து வந்துள்ளான். அன்றைய தினம் வீரராஜ் சுப்பம்மாள் வீட்டுக்கு ஜீவா இருப்பார் என்று எண்ணி வீரராஜ் சென்றுள்ளான். அவர் சென்று விட்டதால் தனியாக இருந்த சுப்பம்மாவை தலையில் அடித்துக் கொலை அங்கு ஒரு வெள்ளைப்பையில் ஜீவா வைத்து விட்டுச் சென்ற நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பியோடி விட்டார். பின்னர் நகைகளுடன் கரகதிகொட்டை அருகே நடந்து சென்ற போது அங்கு ரோந்து வந்த கோட்டைப்பட்டினம் காவலர் மாரியப்பன் அவரை பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் அவரை தாக்கி விட்டு நகைகளை போட்டு விட்டு தப்பியோடி விட்டார். அதன் பிறகு மீண்டும் சுப்பம்மாள் வீட்டுக்கு சென்று அவரை கற்பழித்துள்ளார். போலீசார் வீரராஜ் விட்டுச் சென்ற வெள்ளைப்பையில் இருந்த நகையில் ஜீவாவின் ஆதார்கார்டு அடையாள அட்டையை வைத்து அவர்தான் இதன் உரிமையாளர் என தெரியவந்தது. அவரிடம் விசாரித்த போது அவர் சுப்பம்மாள் வீட்டுக்கு சென்றதும் தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் வீரராஜை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கொலையாளியை விரைந்து கைது செய்த டிஎஸ்பி சிவராமன், இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம், காவலர் மாரியப்பன் உள்ளிட்ட தனிப்படையினரை டிஐஜி ஆனிவிஜயா, எஸ்பி பாலாஜி சரவணன் ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள்.

Translate »
error: Content is protected !!