மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசும் இடதுசாரிகளும் கூட்டணி அமைத்துள்ளன. மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில் மூன்றாவது அணியாக காங்கிரஸ் – இடதுசாரிகளின் கூட்டணி உருவாகியுள்ளது.
கேரளாவில் ஆளும் இடதுசாரிகளுக்கு எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் மேற்குவங்க இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஜம்மு காஷ்மீரில் உருவான 6 காஷ்மீர் கட்சிகளின் குப்கார் கூட்டணிக்கும் காங்கிரஸ் தனது ஆதரவைத் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.