மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பற்றி எரிய துவங்கியது காட்டு தீ…..அரிய வகை மரங்கள் எரிந்து நாசம்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பற்றி எரிய துவங்கியது காட்டுத்தி.  100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பற்றி எரிந்து வரும் காட்டு தீ……அரிய வகை மரங்கள் எரிந்து நாசம்.

தேனி மாவட்டம் பெரியகுளம்  மேற்கு தொடர்சி மலை செலும்பு பகுதிக்கு மேல் உள்ள வனப்பகுதியில் இன்று மாலை முதல் காட்டுத்தீ பற்றி எரிய துவங்கியது. தொடர்ந்து மாலை நேரங்களில் காற்றி வேகம் அதிகமாக உள்ள நிலையில் தீ மளமளவென பரவியதால் தீயானது 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் எரியத்துவங்கியது.

இதனால் மேற்கு தொடர்சி மலை காடுகளில் அடர்ந்த விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகை செடிகளும் காட்டு தீயினால் எரிந்து கருகி வருகின்றன. காட்டு தீயினால் வனவிலங்குகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றதுமேலும் காட்டுத் தீ எரிந்து வருவதை குறித்து தேவதானபட்டி வனச்சரக அதிகாரியிடம் கேட்ட போது காட்டு தீயை கட்டுபடுத்த 10க்கும் மேற்பட்ட வனக்காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

 

Translate »
error: Content is protected !!