யாழ்ப்பாணம்.. இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி.. புதிதாக இன்று மாணவர்கள் திறந்து வைப்பு

யாழ். பல்கலையில் கடந்த ஜனவரி மாதம்  இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபியானது, மீண்டும்  மாணவர்களால்  புதிதாக அமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டது.

இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம்  8ம் தேதி இரவு இரவாக பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.

உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகத்திற்குள் இந்த நினைவு தூபியானது  அமைக்கப்பட்டிருந்ததுஇந்த நினைவுச் சின்னம் இரவோடு இரவாக அடித்து அழித்து அங்கிருந்து அகற்றப்பட்டது.

நினைவு தூபி  இடிக்கப்பட்டதற்கு சர்வதேச அளவில் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினர். இடிக்கப்பட்ட நினைவு சின்னத்தை மீண்டும் அமைக்க அனுமதிக்க வேண்டும், பல்கலைக்கழக வளாகத்தை விட்டு போலீசார் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் செய்தனர்.

மேலும், இலங்கை வடக்குகிழக்கு பகுதியில் முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த போராட்டங்கள் காரணமாக இலங்கை யாழ்ப்பாணத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களுடன் பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாணவர்களின் கோரிக்கையை   ஏற்று மீண்டும் பல்கலைக்கழக வளாகத்தில் அரசின் அங்கீகாரத்துன், மீண்டும் பழைய வடிவத்திலேயே முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என துணைவேந்தர் உறுதி அளித்தார்.

இதனையடுத்து மாணவர்களின் முயற்சியால் பல்கலைக்கழக வளாகத்தின் அதே இடத்தில்   அரசின் அங்கீகாரத்துடன் இன்று மீண்டும் பழைய வடிவத்திலேயே முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைத்து அங்கு மாணவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!