அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி! எச்சரிக்கையுடன் இருக்க மோடி அறிவுரை

கோவிட் வைரஸ் தொற்றில் இருந்து நாடு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், “ஊரடங்கு முடிவடைந்தாலும் வைரஸ் இன்னும் நீங்கவில்லை. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் ” என்று, பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்து நாடு போராடி வரும் நிலையில், ஊரடங்கு அமலுக்கு பிறகு பிரதமர் மோடி இன்று மாலை, 7வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் ஒவ்வொரு 10 லட்சம் பேரில் 83 ஆகும். இது அமெரிக்கா, பிரேசில், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் 600-க்கும் மேல் உள்ளது.
அமெரிக்காவாக இருந்தாலும் ஐரோப்பாவாக இருந்தாலும், கொரோனா பாதிப்புகள் குறைந்து, பின்னர் திடீரென உயர்ந்து வருவதை நாம் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நாட்டில் மீட்பு விகிதம் நன்றாக உள்ளது. இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு 10 லட்சம் மக்கள்தொகையில் 5,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் அமெரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் இந்த எண்ணிக்கை 25,000 ஆகும்.

பல புகைப்படங்களை பார்க்கும் போது மக்கள் இப்போது கவனமாக இல்லை என்பது தெளிவாகக் காணப்படுகிறது. இது சரியல்ல. நீங்கள் முககவசம் இல்லாமல் வெளியேறினால், உங்கள் குடும்பங்களை ஆபத்தில் ஆழ்த்துகிறீர்கள்.

கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு தடுப்பூசி முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் வரை, இந்த நோயைப் பற்றி நாம் மனநிறைவுடன் இருக்க முடியாது. கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதற்கும், ஒவ்வொரு இந்தியருக்கும் அது கிடைப்பதை உறுதி செய்வதற்கும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம்.

பண்டிகை காலங்களில், சந்தைகள் மீண்டும் பிரகாசமாக இருக்கின்றன. ஊரடங்கு முடிவடைந்திருக்கலாம், ஆனால் கொரோனா வைரஸ் இன்னும் தொடர்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று மோடி பேசினார்.

Translate »
error: Content is protected !!