உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறந்த மாநிலம்: தமிழகத்திற்கு விருது

தமிழக அரசு, உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறந்த மாநிலத்திற்கான விருதை, தொடர்ந்து 6வது முறையாக பெற்றுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இருந்து இணையவழியில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வழங்கிய விருதை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக்கொண்டார்.

தமிழகத்தில் இதுவரை 1,392 கொடையாளர்களிடம் இருந்து 1,245 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் மார்ச் முதல் இதுவரை 27 கொடையாளர்களிடம் இருந்து 97 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதாக, அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 107 கல்லீரல் அறுவை சிகிச்சைகள், 183 சிறுநீரக அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. கொரொனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட 6 நோயாளிகளுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை நடைபெற்று, உயிர் பிழைத்து உள்ளதாக, இந்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் உறுப்பினர் செயலர் காந்திமதி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Translate »
error: Content is protected !!