வாஷிங்டன்,
சீனாவில் உகான் நகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 218-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே உலகம் முழுவதையும் தனது பிடிக்குள் வைத்திருக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாரிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி விட்டன. தடுப்பூசிகளை தயாரித்து வரும் பல நாடுகள் அவற்றை இறுதிக்கட்ட சோதனைகளில் இருக்கும்போதே, அவசர தேவைக்கு பயன்படுத்தவும் தயாராகி வருகின்றன. கொரோனாவிற்கு முடிவு காலம் நெருங்கி விட்டது எனலாம். இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15.24 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை சுமார் 6,62,24,358 பேருக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4,58,08,278 பேர் குணமடைந்துள்ளனா்.
சுமார் 1,88,91,820 பேர் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,06,090 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் இதுவரை 1,47,72,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,85,550 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 86,58,882 பேர் குணமடைந்துள்ளனர், 58,28,103 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடுத்தபடியாக பிரேசிலில் 1,75,981 பேரும், இந்தியாவில் 1,39,736 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகிறது.
கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அந்த நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் கொரோனாவின் முதல் அலையை விட 2-வது அலை மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கு தினமும் சுமார் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல் உயிரிழப்பும் ஆயிரக்கணக்கில் இருந்து வருகிறது. இதனால் அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. பலி எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரத்தை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 755 அதிகரித்து 175,270 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று எண்ணிக்கை 50,434 அதிகரித்து 6,487,084 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு அடுத்து பிரேசில் மூன்றாவது இடத்தில் உள்ளது.