காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும் இந்திரா காந்தி குடும்பத்தின் நெருங்கிய ஆதரவாளரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அகமது படேல் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அகமது படேல் மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான அகமது படேல் (71) கரோனா தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனையில் காலமானார்.
அகமது படேல் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா,
பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், மல்லிகார்ஜூன கார்கே எம்பி, முன்னாள் அமைச்சர் ஜிதின் பிரசாதா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகரி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி எம்பி, அபிஷேக் சிங்வி, மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்