கூட்டுறவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு, கூட்டுறவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தீபாவளியையொட்டி ஆண்டுதோரும் தமிழக அரசு கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பது வழக்கம். அவ்வகையில், இந்த ஆண்டும் கூட்டுறவு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச போனஸ் 8.33 சதவீதம், கருணைத் தொகை 1.67 சதவீதம் சேர்த்து 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று, தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!