கொங்கு மண்டலத்தில் திமுக 46 தொகுதிகளில் அதிரடி போட்டி…

சென்னை,

கொங்கு மண்டலத்தில் திமுக 46 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. இப்படி ஒரு அறிவிப்பு மிக துணிச்சலானதுஅசாத்திய தைரியமிக்கது. அதிமுகவுக்கு நேரடி சவால் விடுவது என்ற விவாதங்கள் அதிர கிளம்பி வருகின்றன.

கொங்கு மண்டலம் என்பது கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை கொண்டதாகும். இங்கு மொத்தம் 61 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தினர் அதிகமாக வாழும் பகுதி ஆகும். இதற்கடுத்து முதலியார்கள். அருந்ததியினர். என்று பெரும்பாலானோர் இருக்கிறார்கள். எம்ஜிஆர் காலத்தில் இருந்தே இது எம்ஜிஆரின் கோட்டை.

எம்ஜிஆருக்கு பிறகுகூட, கொங்கு மண்டலத்தை தன் பிடியில் இருந்து விடாமல் இறுக்கமாக பற்றிக் கொண்டு வைத்திருந்தார் ஜெயலலிதா. இதற்கு பிறகு கடந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் இருந்து மட்டும் 61 அதிமுகவினர் வெற்றி பெற்று எம்எல்ஏவானார்கள்.

இதுதான் ஆட்சி அமைய முக்கிய காரணமாக இருந்தது. இதுநாள் வரை, கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக பொறுப்பு வகித்தது இல்லை என்பதும் அதிமுகவுக்கு கூடுதல் பிளஸ். இதைதவிர, கடந்த வருடங்களில் அதிமுக அரசு இந்த கொங்கு மண்டலத்துக்கு செய்த நலத்திட்டங்கள் ஏராளம். மிக மிக முக்கிய அமைச்சர்கள் 4 பேர் இதே கொங்குவில் இருப்பதால், சகல அறிவிப்புகளும் இந்த மண்டல மக்களை குளிர்வித்தபடியே இருந்து வருகின்றன.

அதனால், திமுகவின் வெற்றி என்பது இங்கு அவ்வளவு சுலபம் கிடையாது. கலைஞர் இருந்தபோது, கொங்கு வேளாளருக்கு பிசி சட்டம் கொண்டுவந்தார். வன்னியர்களுக்கும் எம்பிசிக்கு கொண்டு வந்தார். அருந்ததியருக்கும் உள்ஒதுக்கீடு செய்தார். இப்படி 3 சாதிகளுக்கும் கருணாநிதி செய்த நலன்கள் ஏராளமானவை. அப்படி இருந்தும் திமுகவால் அங்கு நிலையாக கால் ஊன்ற முடியவில்லை.

அதுமட்டுமல்ல, கடந்த முறை தேர்தலில் கொங்கு மண்டல வாக்குகள் மட்டும் கூடுதலாக கிடைத்திருந்தால், இந்நேரம் திமுகதான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருந்திருக்கும். இப்படிப்பட்ட சூழலில்தான் திமுக கடந்த 6 மாத காலமாகவே ஸ்கெட்ச் போட ஆரம்பித்தது. திமுகவை அந்த மண்டலத்தில் வலுப்படுத்தவும், பலப்படுத்தவும் மூத்த தலைவர் கே.என். நேரு நேரடியாகவே களம் இறக்கியது.

தொகுதி வாரியாக ரிப்போர்ட் எடுத்து கட்சி தலைமைக்கு அனுப்பியது.. முக்கிய பொறுப்பாளர்களை நியமித்து சாதீய ஓட்டுக்களை குறி வைத்தது. அதன்மூலம் நன்மதிப்பையும் பெற ஆரம்பித்தது.. இந்த சமயத்தில் எடப்பாடியாரும் சும்மா இல்லை. கடந்த 5 வருஷத்தில் அதிமுக ஆட்சியில் அருந்ததியர் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர், பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற பேச்சு எழவும், உடனடியாக அதை நீக்க முயற்சித்தார்.

அதற்காகவே, அருந்ததியர் காலனியில் மக்களோடு சேர்ந்து சாப்பிட்டார்.. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும் உத்தரவிட்டுள்ளார். கரையான்பாளையம் பகுதியில், ஆதிதிராவிடர் காலனிக்கு சென்று உறுப்பினர் வீட்டில் டீ குடித்தார். இதையும் திமுக கவனிக்காமல் இல்லை.

இதையடுத்து கனிமொழியின் பிரச்சாரம் இந்த மண்டலத்தில் பெரிதும் கைகொடுத்தது என்று சொல்லலாம். ஒவ்வொரு சமூக மக்களையும் கனிமொழி சந்தித்து பேசி, அவர்களின் குறைகளை கேட்டு, அந்த இன பெண்களை தன்னோடு சேர்த்து கட்டியணைத்து கொண்டது, அரசியல் களத்தில் பெரிதும் பேசப்பட்டது.

பாஜக எவ்வளவோ முயற்சித்தும் அதிமுக, கொங்குவை விட்டுதரவே இல்லை. இந்த வருத்தம் இன்னமும் பாஜகவுக்கு உள்ளது. அந்த அளவுக்கு கொங்குவை அதிமுக நம்பி கொண்டுள்ள நிலையில், திமுக இப்படி துணிச்சலான முடிவை எடுத்துள்ளது.. மொத்தம் 47 தொகுதிகளில் போட்டியிட போகிறதாம்.,

அதிமுகவின் கோட்டை என்று தெரிந்தும், பாஜகவின் ஆதரவு சார்ந்த இடம் என்று தெரிந்தும், திருமாவளவன் மீது கொங்கு மண்டல மக்களுக்கு 10 வருட கோபம் இருக்கிறது என்று தெரிந்தும், 46 இடங்களில் திமுக மோதுகிறது என்றால், உண்மையில் ஸ்டாலினின் தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும். கொங்குவை கொக்கி போட்டு இழுக்க போவது யார்? எடப்பாடியாரா? ஸ்டாலினா? பார்ப்போம்..!

Translate »
error: Content is protected !!