சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக, அதிமுகவில் சென்னையில் 6 புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அதற்கு பொறுப்பாளர்களை நியமித்து கட்சி தலைமையகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் – மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே ஆயத்தமாகி வருகின்றன.
இந்த சூழலில் சென்னையில் அதிமுக தன்னை பலப்படுத்திக் கொள்ள ஏதுவாக, 6 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் வட சென்னை தெற்கு, தென் சென்னை வடக்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்டங்கள் கீழ்கண்டவாறு புதிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, பின்வருமாறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும்.
மாவட்ட செயலாளர்களாக கீழ்க் கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி வட சென்னை தெற்கு (கிழக்கு): ராயபுரம், திருவிக நகர்- டி ஜெயக்குமார் (மாவட்ட செயலாளர்); வட சென்னை தெற்கு (மேற்கு): எழும்பூர், துறைமுகம்- நா.பாலகங்கா.
தென் சென்னை வடக்கு (கிழக்கு): சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு- ஆதிராஜாராம்; தென் சென்னை வடக்கு (மேற்கு): தியாகராயநகர், அண்ணாநகர்- தி நகர். சத்யா எம்எல்ஏ;
தென் சென்னை தெற்கு (கிழக்கு): மயிலாப்பூர், வேளச்சேரி- எம் கே அசோக்; தென் சென்னை தெற்கு (மேற்கு): விருகம்பாக்கம், சைதாப்பேட்டை- விருகை ரவி எம்எல்ஏ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.