தமிழகத்தில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு! மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்தில் தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது; இதற்கிடையே பட்டாசு வெடிப்பதற்கான தடையை நீக்கக்கோரி ஒடிசா அரசுக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

வரும் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தற்போது அதற்கான வியாபாரம் களை கட்டத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், மாசு கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

இதுதொடர்பாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் வெளியிட்ட அறிவிப்பில், தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும்; இரவில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் மாசில்லா தீபாவளியைக் கொண்டாடும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

மறுபுறம், ராஜஸ்தான், ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்கள் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்துள்ளன. அந்த தடையை நீக்கக்கோரி, ராஜஸ்தான், ஒடிசா மாநில முதல்வர்களுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், நாட்டில் 90% பட்டாசு உற்பத்தி தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்று மாசு, ஒலி மாசு விதிகளின்படியே பட்டாசு தயாரிக்கப்படுகிறது.

பசுமை பட்டாசுகளே அதிகம் உற்பத்தி செய்யப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு பிரச்சினை ஏற்படாது. எனவே, பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!