தேனி மாவட்டத்தில் உள்ள 92 மதுபான கடைகள் திறப்பு.. 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நின்ற மது பிரியர்கள்

தேனி மாவட்டத்தில் உள்ள 92 மதுபான கடைகள் திறப்பு. மது வாங்க காலை முதல் நீண்ட வருசையில் நின்ற மது குடிப்போர். 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு  சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து காவல் துறையினர் நடவடிக்கை.

தேனி மாவட்டம் பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, போடி, கம்பம் பகுதிக்குட்பட்ட உட்பட்ட பகுதிகளில் உள்ள 92 அரசு மதுபான கடைகள் இன்று திறக்கப்பட்டு மது விற்பனை துவங்கி நடைபெற்று வருகின்றது. 40 நாட்களுக்கு பின் மதுக்கடை திறந்ததால் மது வாங்குபவர்கள் காலை 8 மணி முதலே கடை முன்பாக நீண்ட வருசையில் நின்று காத்திருந்தனர். காலை 10 மணிக்கு மதுக்கடை திறக்கப்பட்டு டோக்கன் வழங்கிய பின்பு அதற்காக கட்டப்பட்ட கட்டை தடுப்புகளுக்கு இடையே நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டனர்.

மது வாங்க வருபவர்களுக்கு கைகளில் சனிடேசர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய எந்த ஏற்பாடும் செய்யப்படாத நிலையில் மது விற்பனை துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நேற்று அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் மது வாங்க வருவோர் குடை பிடித்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது

இந்நிலையில் ஆனால் மது வாங்க வந்த நபர்கள் யாரும் குடையுடன் வராத நிலையிலேயே காணப்பட்டது. மேலும் பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தொடர்ந்து மது குடிக்க வருபவர்களை சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்க வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மது வாங்க வந்த மது குடிப்போர் முழுவதும் முகக்கவசம் அணிந்து இருந்தாலும் தன் முகம் தெரிய கூடாது என்று தலையில் துண்டுகளை போட்டு முகத்தை மூடிக் கொண்டு சென்றனர். இந்நிலையில் மது வாங்க வருபவர்களின் கூட்டம் அதிகரித்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக மது குடிப்போர் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவை வாங்கிச் சென்று வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!