தேர்தல் களத்தில் அதிரடியாக இறங்கிய அதிமுக….ஜெயலலிதா பிறந்த நாளன்று விருப்ப மனு விநியோகம்!

அதிரடியாக தேர்தல் களத்தில் இறங்கியது அதிமுகஜெயலலிதா பிறந்த நாளன்று விருப்ப மனு விநியோகத்தை தொடங்குகிறது!!

சென்னை,

சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட பிப்ரவரி 24ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று அதிமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை

முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமை கழகத்தில் வருகின்ற 24ம் தேதி புதன்கிழமை முதல் மார்ச் 5ம் தேதி வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழே குறிப்பிட்டுள்ளவாறு விண்ணப்பக் கட்டணத் தொகையை செலுத்தி விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள் மற்றும் கட்டணத் தொகை::

தமிழ்நாடு : ரூ. 15,000

புதுச்சேரி : ரூ.5,000

கேரளா : ரூ.2.000

Translate »
error: Content is protected !!