பல்லாவரம் தொகுதியில் இன்று அதிகாலை வரை சீல் வைக்காத வாக்கு இயந்திரங்கள்… தேர்தல் அதிகாரியை கண்டித்து திமுக உள்ளிட்ட கட்சியினர் வாக்குவாதம்

பல்லாவரம் தொகுதி அனகாபுத்தூர் அரசு மேல் பள்ளியில் இன்று அதிகாலை வரை வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்காத மண்டல தேர்தல் அதிகாரியை கண்டித்து, திமுக உள்ளிட்ட கட்சியினர் வாக்குவாதம். விடியவிடிய வாக்குச்சாவடியில் காத்திருந்த தோ்தல் பணியாளா்கள் மற்றும் வாக்குச்சாவடி ஏஜெண்டுகள்.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் அடங்கிய  அனகாபுத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில்  20  வாக்குச்சாவடி மையங்கள் செயல்பட்டன.அந்த வாக்குச்சாவடிகளுக்கு மண்டல பொறுப்பாளராக பம்மல் நகராட்சி டவுன் பிளானிங் இன்ஸ்பெக்டா் தாமரைசெல்வன் என்பவா் இருந்துள்ளாா்.

நேற்று இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு   முடிந்ததும்,இரவு 8 மணிக்குள் அதில் 4 வாக்குச்சாவடிகளுக்கான வாக்கு இயந்திரங்களுக்கு மட்டும் சீல் வைத்தனா்.ஆனால்  16 மின்னணு வாக்கு  இயந்திரங்களுக்கு சீல் வைக்க வில்லை. அங்கு மண்டல தேர்தல் அதிகாரியாக உள்ள தாமரைச்செல்வன் என்பவர் நள்ளிரவு 12 மணி ஆகியும் சீல் வைக்காமல் காலம் கடத்தியதாக  கூறப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகளின் ஏஜெண்ட்கள்,வாக்குச்சாவடி ஊழியா்கள் யாரும் அங்கிருந்து வெளியேற முடியாமல் அங்கேயே இருந்தனா்.

இதனால் அங்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள், மண்டல அதிகாரி தாமரைச்செல்வன் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஆனால் அவா் எந்த காரணமும் கூறாமல் மவுனம் காத்தாா்.

இதனையடுத்து திமுக வேட்பாளர்,மற்றும் சில வேட்பாளா்கள்  மாவட்ட ஆட்சியா் மற்றும் தோ்தல் அதிகாரிக்கு புகார் செய்தனா். இதனையடுத்து உயா் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இன்று அதிகாலை வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடந்தது.அதன்பின்பு அதிகாலை 3.15 மணிக்கு வாக்குஇயந்திரங்கள் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டன.

இதற்கிடையே வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்காமல் காலதாமதம் செய்தது பற்றியும்,பல்லாவரம் தொகுதியில் அடங்கிய பம்மல் நகராட்சி அதிகாரியை,தோ்தல் விதிமுறைக்கு மாறாக அதே அதே தொகுதியில் மண்டல அலுவலராக நியமித்தது பற்றியும் தோ்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகள் புகாா் செய்துள்ளன.

Translate »
error: Content is protected !!