டெல்லியில் இந்த ஆண்டு மா பருவத்தில் குறைவான வாடிக்கையாளர்கள் சந்தைக்கு வரும் சூழலில் பழ விற்பனை குறைந்து வருகிறது.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனாவின் தாக்கத்தை அதிகம் சந்தித்த டெல்லியில் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஊரடங்கு கட்டுப்பாடுகள், கொரோனா பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் என்றதால் பொதுமக்கள் வெளியே செல்லாமல் முடங்கி கிடக்கும் சூழல் காணப்படுகிறது.
இந்த வருடம் மாம்பழ சீசன் முன்பு போல மக்களை கவர வில்லை. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது, கொரோனா பரவும் அபாயம் என்ற அச்சத்தால் பொதுமக்கள் முடங்கிப்போயுள்ளனர்.
இதனால்,காய்கறி மற்றும் பழச் சந்தைகள் பொருட்களின் விற்பனையில் அமைதியின் புகலிடமாகக் காணப்படுகின்றன. டெல்லியின் ஓக்லா மண்டியில் உள்ள பழ வியாபாரி முகமது யமீன் கருத்துப்படி, குறைவான வாடிக்கையாளர்கள் பழக் கடைகளுக்கு வருகிறார்கள்.
பழங்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் பழம் வாங்க வந்தவர்கள் ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு வந்ததைப் போல வரவில்லை. இதனால் எங்களுடைய பழங்கள் அழுகுவதாகக் கூறப்படுகிறது.