பீகாரில், 100 பேருடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது மூழ்கியதில், 20 பேர் உயிரிழந்தனர். மூழ்கியவர்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது.
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்ட நௌகாசியா பகுதியில் கங்கை ஆற்றில் படகு சென்று கொண்டிருந்தது. அதில் 100 பேர் வரை பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதனால் படகில் பயணித்த அனைவரும் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். உயிரை காப்பாற்றும்படி கதறினர். இதுபற்றி தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில், 20க்கும் மேற்பட்டவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். இதுவரை நடந்த மீட்புப்பணியில் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சியவர்கள் தேடும்படி நடப்பதாகவும் கூறப்படுகிறது.
பீகாரை உலுக்கியுள்ள இந்த விபத்துக்கு முதல்வர் நிதீஷ் குமார் உள்ளிட்டவர்கள் இரங்கள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.