மதுபோதையால் தாய்க்கு நடந்த சோகம்!

சென்னை அடுத்த நெற்குன்றம் பகுதியில் பெற்ற தாயை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். நெற்குன்றம் பெருமாள் கோவில் பகுதியில் வசித்து வந்த மூதாட்டி ஆதியம்மாளுக்கு அவரது மகனுக்கு தினமும் தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.

சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த மகன் மகேஷ் தாயுடன் தகராறில் ஈடுபட்ட போது ஆத்திரமடைந்து அருகிலிருந்த இரும்பு ராடை எடுத்து அடித்துள்ளார். இதில் நிலைகுலைந்த தாய் ஆதியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காலையில் உறவினர்கள் வந்து போர்த்த போது ஆதியம்மாள் இறந்து இருந்தததை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்த அவர்கள் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தாயை கொலை செய்த மகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!