மாநில மொழிகளில் ஜே.இ.இ. தேர்வு… மத்திய அமைச்சர் பொக்ரியால் தகவல்!

ஜே.இ.இ.மெயின் தேர்வுகள் மாநில மொழிகளிலும் இனி நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கீழ் செயல்படும் பொறியியல் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜே.இ.இ மெயின் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதாவது ஐஐடி, என்.ஐ.டி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு, இந்தத் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும்.

இந்த தேர்வுகள் இதுவரை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுகளை பிராந்திய மொழிகளில் நடத்த வேண்டும் என்று, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், ஜே.இ.இ மெயின் தேர்வுகளை கூடுதலாக அந்தந்த மாநில மொழிகளிலும் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

அதாவது, முதன்மைத் தேர்வு, அட்வான்ஸ் தேர்வு என இரு கட்டங்களாக நடத்தப்படும் ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் இனி, பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!