லக்னோவில் சாலையின் நடுவில் வண்டி ஓட்டுநரை சரமாரியாக அடித்த பெண்.. ஏன்..!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கார் டிரைவரை ஒரு பெண் கடுமையாக தாக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அவாத் பகுதி போக்குவரத்து சிக்னல் அருகே உள்ள பாத சாரிகள் பாதையை கடக்கும் போது கார் தன் மீது மோதியதாகக் கூறிய அந்த பெண், போக்குவரத்து போலீசார் முன்னிலையில் கார் டிரைவரை சரமாரியாக தாக்கியுள்ளார். என்னை ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்ட அந்த டிரைவரின் செல்போனைப் பறித்து அந்தப் பெண் உடைத்துள்ளார். மேலும் அந்த குறித்து பேச வந்தவர்களுடனும் அந்த பெண் தகராறில் ஈடுபட்டார். இச்சம்பவம் குறித்து பற்றிய தகவல்கள் முழுமையாக வெளியிடப்படாததால் #ArrestLunowGirl என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் படு வேகமாக வைரல் ஆகி வருகிறது.

Translate »
error: Content is protected !!