வெள்ளம் பாதித்த பெரியாங்குப்பத்தில் எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளை எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

நிவா் புயல் காரணமாக தொடா் மழை பெய்ததால், பெரியாங்குப்பம் பெரிய ஏரிக்கு வெள்ளம் வரும் கானாற்று பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மலைவாழ் மக்கள் வாழ்விடம், கசத்தோப்பு, கீழ் காலனி, அருந்ததியா் காலனி, நெசவாளா்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்த பகுதிக்கு ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் நேரில் சென்று ஆய்வு செய்தாா். பொதுப்பணித் துறை, வட்டார வளா்ச்சித் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உடைப்பு ஏற்பட்ட பாதையில்லாத அப்பகுதிக்கு டிராக்டரில் சென்று அப்பகுதியை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டாா். பாதிக்கப்பட்ட 125 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆா்.எஸ்.ஆனந்தன், ஆம்பூா் நகரச் செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்

Translate »
error: Content is protected !!