200 பஸ்கள் மறுசீரமைத்து மீண்டும் சேவையில் இணைப்பு

 

பழுதடைந்த நிலையில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்த 200 பஸ்களை மறுசீரமைத்து மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.

வாகன ஒழுங்குறுத்துகை, பஸ் போக்குவரத்துச் சேவைகள், புகையிரதப் பெட்டிகள், மோட்டார் வாகனக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அவர்களின் யோசனைக்கமைய, போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியின் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத்திட்டம் முன்னெக்கப்பட்டது.

இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ், பயன்பாட்டிருந்து முழுமையாக நீக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதிலுமுள்ள 107 டிப்போக்களில் காணப்பட்ட 200 பஸ்கள் புதுப்பிக்கப்பட்டன. இதற்காக, 136 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது, மறுசீரமைக்கப்பட்ட பஸ்களைக் கண்காணித்த ஜனாதிபதி அவர்கள், இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்களுடனும் கலந்துரையாடி, அவர்களை ஊக்கப்படுத்தினார்.

மேலும் போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சின் செயலாளர், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க ஆகியோர் உள்ளிட்ட பலர், இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

 

Translate »
error: Content is protected !!