பொதுமக்கள் கூடுவதை தடுக்க அனைத்து சனி கிழைமைகளிலும் இறைச்சி கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். அதன்படி, இறைச்சி கடைகளுக்கு முற்றிலுமாக தடை விதித்தது. இந்த நிலையில், வரும் நாட்களில் சனிக்கிழமைகளிலும் மீன், இறைச்சி கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
Month: April 2021
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேமுதிக ஆதரவு
ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க, நான்கு மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம் என்ற தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு அளிக்கிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான சிகிச்சைக்கு பயன்படும் ஆக்சிஜன் சிலிண்டரின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு. ஆக்சிஜன்…
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரியகுளத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரியகுளம் மார்கேட் பகுதிக்கு செல்லும் வழித்தடங்கள் அனைத்தையும் கட்டைகள் போட்டு அடைந்த்து மார்கெட் செல்லும் அனைவருக்கும் கிருமி நாசினி தெளித்து கபசுர குடிநீர் வழங்கி பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தேனி மாவட்டம் பெரியகுளம்…
சாலையில் விடப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!
சாலையில் விடப்படும் வளர்பு மாடுகளின் உரிமையாளர்கள் மீது விலங்குகள் கொடுமை தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம், காவல்துறை கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரை மற்றும் வடகரை…
கொரோனாவால் உயிர் நீத்த தலைமைக் காவலர் மகாராஜன் திருவுருவப் படத்திற்கு காவல் அதிகாரிகள் மலரஞ்சலி
கொரோனா நோய் தொற்றால் உயிர் நீத்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக் காவலர் மகாராஜன் திருவுருவப் படத்திற்கு காவல் ஆணையர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மலரஞ்சலி. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24.4.2021 அதிகாலை இறந்த K-4 அண்ணாநகர் …
ஸ்டெர்லைட் ஆலை… ஆக்ஸிஜன் உற்பத்தி தவிர வேறு எந்த நடவடிக்கையும் நடக்க கூடாது – கே.பாலகிருஷ்ணன் பேச்சு
ஆக்ஸிஜன் உற்பத்தி தவிர வேறு எந்த நடவடிக்கையும் நடக்க கூடாது என அனைத்துக் கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சு.. ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே முழுமைகாக கையகப்படுத்த வேண்டும். அவ்வாறு கையகப்படுத்தி ஆக்ஸிஜனை உற்பத்தி…
ஆக்சிஜன் தேவை இருப்பதால்… ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு பொறுப்பில் எடுத்துக் கொண்டு ஆக்சிஜன் ஆக்க வேண்டும் – வைகோ
ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்குவதற்கு, குஜராத், கோவா ஆகிய மாநிலங்கள் அனுமதிக்காத நிலையில், மராட்டிய மாநிலத்தில் தொடங்க உரிமம் அளித்தனர். இரத்தினகிரி மாவட்டத்தில் தொழிற்கூடம் கட்டி தொடங்க இருந்த நிலையில், அங்கே விவசாயிகள் திரண்டு வந்து உடைத்து நொறுக்கினர். அதனால், மராட்டிய அரசு…
ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாம்- திமுக, காங் உள்ளிட்ட கட்சிகள் கருத்து
ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட்டை அனுமதிக்கலாம் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரும் வேதாந்தாவின் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய விசாரணை நடத்தவுள்ளது. இந்த வழக்கின்…
சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு விமான பயணிகளுக்கு இன்றிலிருந்து புதிய கட்டுப்பாடு
சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு விமான பயணிகளுக்கு இன்றிலிருந்து புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தமான் உள்ளிட்ட 6 வெளிமாநிலங்களுக்கு செல்லும் விமான பயணிகளுக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம். அந்தமான், புவனேஸ்வா் (ஒடிசா), ஜெய்ப்பூா் (ராஜஸ்தான்), இம்பால் (மணிப்பூா்), பேக்டோக்ரா (மேற்குவங்கம்), ராஜ்கோட்…
இன்று கணித மேதை சீனிவாச இராமானுசன் நினைவு நாள்
கணித மேதை ராமானுசன் 1920-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் மரணமடைந்தார். கணித மேதையான ராமானுசம் சீனிவாசன்–கமலத்தம்மாள் ஆகிய தம்பதியருக்கு 1887-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி ஈரோட்டில் பிறந்தார். இவருக்கு பிறகு இவரது பெற்றோருக்கு மூன்று குழந்தைகள்…