திரிபுரா மாநில இளைஞர்கள் மாமான்மியா (22), ஜாஹிர் உசேன் (21) சுமன் அஃத்தார் (20) ஆகியோரை செம்மஞ்சேரி போலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரித்தனர். அப்போது அந்த வடமாநில இளைஞர்களிடம் இருந்து 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையின்போது திரிபுராவில் இருந்து கஞ்சாவை ரயில் மூலம் கடத்தியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கைதான மாமான் மியா மற்றும் ஜாஹிர் உசேன் இருவரும் வேளச்சேரியில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த நபரின் டீ கையில் வேலை செய்து வந்துள்ளதாக விசாரணையில் கூறினர். சுமன் என்பவன் மேடவாக்கத்தில் தச்சு கூலி வேலை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. செம்மஞ்சேரி போலிசார் குற்றவாளிள் மூவரையும் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர்கள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.