தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள 4 காவல்நிலையங்களில் கடந்த மாதத்தில் பதிவான இடத்தகராறு, குடும்ப பிரச்சனை, சொத்து தகராறு உள்ளிட்ட சிறிய வழக்குகளை தீர்வு காணும் வகையில் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் வழக்குகள் தீர்வு கானும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பெரியகுளம் வடகரை, தென்கரை காவல்நிலையங்கள், தேவதானப்பட்டி காவல்நிலையம், ஜெயமங்களம் காவல்நிலையம் உள்ளிட்ட 4 காவல்நிலையங்களில் பதிவான 47 வழக்குகளை தீர்வு காண மனுதாரர்களையும் எதிர் தரப்பினரையும் அழைத்து பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் 4 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் சேர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் தீர்வு காணும் முகாமை நடத்தினர்.
இதில் 35 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு வழக்குகளில் சமரசம் செய்து தீர்த்து வைக்கப்பட்டது. இந்த வழக்குகள் தீர்வு காணும் முகாமில் பெரியகுளம் பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்று கொடுத்த வழக்குகளுக்கு தீர்வு கண்டனர். காவல் நிலயத்தில் பதிவான வழக்குகளுக்கு தீர்வு காணும் முகாமில் 35 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு முடித்து வைக்கப்பட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள 4 காவல்நிலையங்களில் கடந்த மாதத்தில் பதிவான இடத்தகராறு, குடும்ப பிரச்சனை, சொத்து தகராறு உள்ளிட்ட சிறிய வழக்குகளை தீர்வு காணும் வகையில் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் வழக்குகள் தீர்வு கானும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பெரியகுளம் வடகரை, தென்கரை காவல்நிலையங்கள், தேவதானப்பட்டி காவல்நிலையம், ஜெயமங்களம் காவல்நிலையம் உள்ளிட்ட 4 காவல்நிலையங்களில் பதிவான 47 வழக்குகளை தீர்வு காண மனுதாரர்களையும் எதிர் தரப்பினரையும் அழைத்து பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் 4 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் சேர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் தீர்வு காணும் முகாமை நடத்தினர். இதில் 35 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு வழக்குகளில் சமரசம் செய்து தீர்த்து வைக்கப்பட்டது. இந்த வழக்குகள் தீர்வு காணும் முகாமில் பெரியகுளம் பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்று கொடுத்த வழக்குகளுக்கு தீர்வு கண்டனர்.