8 மாதங்களுக்குப் பிறகு வைகை அணை உள்ளே செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளனர்

தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமான வைகை அணை பூங்காவிற்குள் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர் இந்நிலையில் 8 மாதங்களுக்கு பின்னர் வைகை அணை பூங்கா இன்று காலை முதல் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டது. திடீரென அறிவிக்கப்பட்டதால் வைகை அணைக்கு மிகவும் குறைந்த அளவு சுற்றுலா பயணிகளே வந்திருந்தனர்.இதனால் வைகை அணை பூங்கா பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் வைகை அணைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கிருமிநாசினி தெளித்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!