ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஜங்காரெட்டிகுடேம் அருகே மாநில அரசு பேருந்து ஆற்றில் விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அஸ்வரப்பேட்டையில் இருந்து ஜங்காரெட்டிகுடேம் நோக்கி மாநில அரசு பேருந்து 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. ஜங்கரெட்டிகுடம் பகுதியில் ஜில்லருவாகு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 21 பேர் மீட்கப்பட்டனர். இதில் 9 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.