இந்திய ஜனநாயகக் கட்சி:
இந்திய ஜனநாயகக் கட்சி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நிறுவனருமான டி. ஆர். பச்சமுத்துவால் ஏப்ரல் 29, 2010இல் தமிழ்நாட்டில் துவக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும். ஊழலையும் சமூக எதிர் செயல்களையும் ஒழிப்பதே இக்கட்சியின் முதன்மை குறிக்கோளாகும். இக்கட்சியின் தலைமையகம் சென்னையில் உள்ளது.
சமக கட்சி:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தமிழ்ப்பட நடிகர் சரத் குமார் தலைமையில் ஆகஸ்ட் 31, 2007 தொடக்கப்பட்ட இந்திய–தமிழக அரசியல் கட்சியாகும். அப்துல் கலாம், காம்ராஜ் ஆகியோரின் சிந்தனைகளை, கொள்கைகளை, வழிகாட்டல்களை முன்னெடுத்து இக்கட்சி செயல்படும்.
கூட்டணி:
ஐ.ஜே.கே. (இந்திய ஜனநாயகக் கட்சி) -வின் தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் சமகவின் தலைவர் சரத்குமார் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, “சமக மற்றும் ஐ.ஜே.கே. ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். கூட்டணியின் பெயர் குறித்து விரைவில் அறிவிப்போம்” எனத் தெரிவித்தனர்.