திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி… உதயசூரியன் சின்னத்தில் போட்டி – வேல்முருகன் அறிவிப்பு

சென்னை,

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி இடம்பெறுவதாகவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட போவதாகவும் அந்த கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் ஏறத்தாழ அனைத்து கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.

முக்குலத்தோர் புலிப்படை, தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட சிறு கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறதுஎனவே இந்தக் கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கப்படுவதாக தெரிகிறது. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று காலை அளித்த பேட்டியின்போது, இந்த கூட்டணியை உறுதி செய்தார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாகவும், இன்று மாலை தொகுதி உடன்பாடு நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அரசு, தமிழக அரசோடு சேர்ந்து கொண்டு மக்கள் விரோத செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும், எனவே, அதை வீழ்த்த திமுக கூட்டணியில் இணைந்து பணியாற்றுகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுகவுக்கு தலால 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக. இதில், மதிமுக, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடப்போவது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!